BIS 916 ஹால்மார்க் தரமுள்ள தங்க நகைகளை
செய்கூலி சேதாரம் இல்லாமல் தரும் புதுமையான திட்டம்.

“இத்திட்டத்தில் முதல் தவணையை செலுத்தி சேரும் வாடிக்கையாளருக்கு திட்டத்தின் இரண்டாம் மாத தவணைத்தொகையை
நியூ KVM ஜூவல்லர்ஸில் மங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.”
(நியூ KVM ஜூவல்லர்ஸ்-ன் அட்வான்ஸ் புக்கிங் பிளான்)

மகளிர் மட்டும்

உதாரணம்

மாதம்
செலுத்தும் தொகை
 தங்கள் கணக்கில் சேரும் தொகை
1 1000 1000
2 1000 ( நிறுவனம் செலுத்தும் தொகை ) 2000
3 1000 3000
4 1000 4000
5 1000 5000
6 1000 6000
7 1000 7000
8 1000 8000
9 1000 9000
10 1000 10000
11 1000 11000
மொத்த தொகை ரூ. 11000
உதாரணமாக, நகை வாங்கும்போது, 22K தங்கத்தின் அன்றைய மார்க்கெட் விலை கிராமிற்கு ரூ.5000 எனில்,
தங்கள் கணக்கில் சேர்க்கப்படும் எடை = 2.2 கிராம்.

பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:

இத்திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?
❈ திட்டத்தின் முடிவில் தங்கள் கணக்கில் சேர்ந்த மொத்த தொகையை அன்றைய மார்க்கெட் விலை நிலவரப்படி 916 (22k) தங்க எடையாக பாஸ்புத்தகத்தில் கணக்கிடப்படும். இவ்வாறு கணக்கிடப்பட்ட எடை என்பது, வாடிக்கையாளர்கள் செய்கூலி + சேதாரம் (18% வரை) இல்லாமல் தங்க நகைகளை வாங்க தகுதிபெறும் எடையாகும். செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் குறைந்தபட்ச & அதிகபட்ச மாதத்தவணை எவ்வளவு?
குறைந்தபட்சம் ரூ.1,000 மாதத் தவணையாக செலுத்தலாம்.

மாதத்தவணை எப்போது, எவ்வாறு செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு மாத இறுதி தேதிக்குள் மாதத் தவணையை தவறாமல் செலுத்திவிட வேண்டும். ரொக்கமாகவோ , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் மாத தவணையை நீங்கள் செலுத்தலாம்.

நான் செலுத்தும் மாத தவணையை எவ்வாறு எனது கணக்கில் வரவு வைக்கப்படும்?
இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் தொகையானது ரொக்கமாகவே தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் சிறப்பு சலுகைகள் அல்லது பண்டிகை கால சலுகைகளுடன் பெற இயலுமா?
திட்ட பலன்களை, சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகை கால சலுகைகளுடன் இணைத்து பெற இயலாது. திட்டத்திற்கான பலன்களை மட்டுமே பெற இயலும்.

தவணையை செலுத்த தவறினால் என்ன ஆகும்?
தவணையை செலுத்த தவறும்பட்சத்தில், திட்டத்தின் பலன்களை பெற இயலாது. மொத்தம் செலுத்திய தவணை தொகையின் மதிப்பிற்கேற்ப நகைகளை சேதாரம் & GST செலுத்தியே வாங்க இயலும்.

இத்திட்டத்தில் எனது சேமிப்பை பணமாக பெற இயலுமா?
தங்க நகைகளாகவே பெற  இயலும். எச்சூழ்நிலையிலும் தங்க காசுகளாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற இயலாது.

    Terms & Conditions

    திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :
    "இத்திட்டத்தில் முதல் தவணையை செலுத்தி சேரும் வாடிக்கையாளருக்கு திட்டத்தின் இரண்டாம் மாத தவணைத்தொகையை நியூ KVM ஜூவல்லர்ஸில் மங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது."
    1.இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் 11 வது மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12 ஆம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
    2. இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் பணம், ரொக்கமாகவே தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
    3 . இத்திட்டத்தில் ரூ.1,000 மாதத்தவணையாக செலுத்தலாம்.
    4. மாதத்தின் 10ஆம் தேதிக்குள் தவணையை தவறாமல், ரொக்கமாகவோ, கிரெடிட் & டெபிட் கார்டுகள் மூலமாகவோ, எங்களின் கலெக்க்ஷன் வாகனங்களிலோ அல்லது www.kvmjewellers.com என்ற எங்கள் இணையதளத்தின் மூலமாகவோ செலுத்தலாம்.
    5. தவணை முறை திட்டங்களில், ஒரு மாதத்திற்கு ஒரு தவணையை மட்டுமே செலுத்த வேண்டும். திட்டத்தின் முதல் மாதம் தொடங்கி இறுதி மாதம் வரை ஒரே தவணை தொகையில் தான் தொடர வேண்டும்.
    6. வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு சேதாரம் / VA + செய்கூலி சேர்த்து 18% வரை நிறுவனமே ஏற்றுக்கொள்ளும், அதற்குமேல் உள்ள சேதாரம் + செய்கூலியை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.
    7. உதாரணமாக வாடிக்கையாளர்கள் வாங்கும் நகையின் சேதாரம் / VA + செய்கூலி சேர்த்து 19% ஆக இருந்தால் வித்தியாச (சேதாரம் / VA + செய்கூலி) 1%க்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. பொருளின் மதிப்பிற்க்குண்டான GST தொகையை வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.
    8. வாடிக்கையாளரின் பாஸ்புத்தகத்தில் உள்ள மொத்த தொகைக்கு அதிகமாக நகைகள் வாங்கும் போது கூடுதலாக வாங்கும் நகைக்கு சேதாரம் / VA, செய்கூலி செலுத்தி பெற்று கொள்ளலாம்.
    9. வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளையும் இத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். (நிபந்தனைகளுக்குட்பட்டது)
    10.இத்திட்டத்தின் மூலம் வாங்கும் யுனிக், NL யுனிக், கிளாசிக், யுனிக் கிளாசிக், பிரைம், பூஜை பொருட்கள், நைஸ், Etc.., போன்ற சிறப்பு வாய்ந்த அனைத்து நகைகளுக்கும் செய்கூலி உண்டு.
    11. சிறப்புவாய்ந்த கற்கள், விலையுயர்ந்த கற்கள், பிறப்பு யோகக் கற்கள், சிர்கான் (Zircon), மற்றும் இதர பிற கல், எனாமல், மணிகள், மெழுகு, வெள்ளி இலை போன்றவைகளுக்கு கட்டணங்கள் பொருந்தும்.
    12. இத்திட்டத்தில் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் உரிய GST வரியை வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.
    13. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாஸ்புக்கை கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் புதிய பாஸ்புக்கை பெற்று உபயோகபடுத்துவதற்கு ரூ.50/- கட்டணமாக செலுத்தவேண்டும். வாடிக்கையாளரின் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்த பிறகே நகல் பாஸ்புக் வழங்கப்படும். இத்திட்டத்தில் வாடிக்கையாளரின் போட்டோ, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் OTP முறையில் பதிவு செய்யப்படும்.
    14. திட்டத்தின் இறுதியில் தங்க நகை வாங்கும்பொழுது திட்டத்தின் உறுப்பினரோ அல்லது சார்ந்தவரோ நேரில் வரவேண்டும். திட்ட உறுப்பினரின் பெயர் மற்றும் கூடுதல் விபரங்களை சரிபார்க்க, உறுப்பினர் தங்களின் ஓரிஜினல் ஆதார் அட்டை & பதிவு செய்த தொலைபேசி எண்ணை அவசியம் கொண்டுவருதல் வேண்டும். மேலும் ஓரிஜினல் பாஸ்புத்தகத்தை கண்டிப்பாக நியூ KVM ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பாஸ் புத்தகம் நியூ KVM ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.
    15. இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கவேண்டும்.
    16. வாடிக்கையாளர் தன்னுடைய வாரிசுதாரர் (Nominee) / சார்ந்தவர் (Dependent) ஒருவரை தேவைப்பட்டால் நியமிக்கலாம்.
    17. இத்திட்டத்தில் சேர்த்த தொகைக்கு மேல் வாங்கும் நகைகளுக்கு சிறப்பு சலுகைகள், கூப்பன்கள், பிளஸ் பாயிண்ட்கள் மற்றும் பண்டிகைகால சலுகைகள் பொருந்தும்.
    18. இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களை பெற இயலாது. திட்ட காலம் முதிர்வு அடைவதற்குள் நகை திட்டத்தை முடித்துக்கொண்டால், திட்டத்திற்கான செயலாக்க கட்டணத்தை(Processing fees) வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.
    19. வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு(PAN Card) போன்ற தங்களுடைய KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
    20. இத்திட்டத்தின் நிபந்தனைகளை மாற்றி அமைக்க நியூ KVM ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. மேலும் அனைத்து சட்டரீதியான முறையீடுகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.
    இந்த அட்வான்ஸ் தொகையை, கையேட்டில்(Catalogue) உள்ள டிசைன் எண்....வாங்குவதற்காக இத்திட்டத்தில் சேர்ந்து முன்பணமாக வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறேன். மேலும், மேற்குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் நன்கு அறிந்து/படித்து புரிந்துகொண்டேன் அதற்கு நான் உடன்படுகிறேன். தேவைப்படும் பொருட்களை ஆர்டர் கொடுத்தும் செய்து கொள்ளலாம் என்பதையும் நான் அறிவேன்.

    Liability Disclaimer - Liablity limited to the amount paid by this customer in this advance booking plan only. ( இந்த முன்பதிவு திட்டத்தில் வாடிக்கையாளர் செலுத்தும் தொகைக்கு மட்டுமே பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.)