நியூ KVM ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்தும்
❈ நீங்கள் செலுத்தும் தொகைக்கு அன்றைய மார்க்கெட்டின் மதிப்பிற்கேற்றவாறு, தூய 22காரட் தங்கம் கிராமில் வரவு வைக்கப்படும்.
❈ நீங்கள் அளிக்கும் தங்கத்தின் மதிப்பிற்கேற்றவாறு, தூய 22காரட் தங்கம் கிராமில் வரவு வைக்கப்படும்.
❈ திட்டத்தின் காலம் – 11 மாதங்கள்.
❈ திட்டகால முடிவில், வரவு வைக்கப்பட்ட தங்கத்தின் எடைக்கு நிகராக தூய 916 ஹால்மார்க் தரமுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். (18% வரை)
பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:
இத்திட்டத்தில் சேருவதற்கு ஆவணங்கள் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டுமா?
இத்திட்டத்தில் செலுத்தும் பணத்தின் மதிப்பானது ரூ.2,00,000 /- அல்லது அதற்குமேல் இருக்கும்பட்சத்தில், அரசின் விதிபடி வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
எங்கள் நகைகளை எப்பொழுது பெற இயலும், திட்டகால முடிவுக்கு முன்னரோ பெற இயலுமா?
திட்டகாலமான 11 மாதங்கள் முடிந்த பிறகு, 12ஆம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். திட்டகால முடிவுக்கு முன்னரே நகைகளை வாங்க விரும்பினால், வாங்கும் நகைகளுக்கு சேதாரம் மற்றும் GST உண்டு. மேலும் தங்க காசுகளாக பெற இயலாது. தங்கம் மற்றும் வைர நகைகளாக மட்டுமே பெற முடியும்.
இத்திட்டத்தில் சேருவதற்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச மற்றும் அதிபட்ச தொகை எவ்வளவு? தவணை முறையில் செலுத்தலாமா?
குறைந்தபட்ச தொகையாக ரூ.10,000 முதல், அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். ஒரு முறை மட்டுமே செலுத்த முடியும்.
தவணை முறை இத்திட்டத்திற்கு பொருந்தாது.
இத்திட்டத்தில் எங்களின் தங்கம் எவ்வாறு வரவு வைக்கப்படும்?
வாடிக்கையாளர்கள் அளிக்கும் தங்க நகைகளை தூய்மை செய்து 22 காரட் தங்கமாக மாற்றி இத்திட்டத்தில் வரவு வைக்கப்படும். மேலும், 24 காரட் தங்க கட்டிகள், தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களையும் கொடுத்து அன்றைய மார்க்கெட் மதிப்பிற்கு 22 காரட் தங்கமாக கிராமில் வரவு வைக்கப்படும்.