BIS 916 ஹால்மார்க் தரமுள்ள ஒன்றரை மடங்கு தங்க வளையல்களை
செய்கூலி சேதாரம் இல்லாமல் தரும் புதுமையான திட்டம்.
(நியூ KVM ஜூவல்லர்ஸ்-ன் அட்வான்ஸ் புக்கிங் பிளான்)

கோல்டு பேங்கல் பிளஸ்

உதாரணம்

மாதம்
செலுத்தும் தொகை
அன்றைய மார்க்கெட்டின் விலை
சேமிக்கும் தொகை (கிராமில்)
1 5000 4400 1.14 கிராம்
2 5000 4450 1.12 கிராம்
3 5000 4500 1.11 கிராம்
4 5000 4550 1.10 கிராம்
5 5000 4600 1.09 கிராம்
6 5000 4650 1.08 கிராம்
7 5000 4700 1.06 கிராம்
8 5000 4500 1.11 கிராம்
9 5000 4500 1.11 கிராம்
10 5000 4800 1.04 கிராம்
11 5000 4800 1.04 கிராம்
மொத்த எடை 12.00 கிராம்
திட்ட கால முடிவில் வாடிக்கையாளர் செய்கூலி சேதாரம் இல்லாமல்
வாங்க தகுதி பெறும் எடை 12 கிராம் + 6 கிராம் = 18 கிராம்

பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:

இத்திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?
❈ மேற்கண்ட உதாரணத்தின்படி திட்ட கால முடிவில் தங்கள் கணக்கில் 12 கிராம் சேர்ந்திருக்கும் பட்சத்தில், (12 / 2=6) தாங்கள் 12 கிராம் முதல் 18 கிராம் எடையுள்ள தங்க  வளையல்களை செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம்.
❈ கூடுதல் எடையான 6 கிராம் தங்கத்திற்கு உண்டான அன்றைய மார்க்கெட் விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது + GST.
❈ இத்திட்டம் தங்க வளையல்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தில் குறைந்தபட்ச & அதிகபட்ச மாதத்தவணை எவ்வளவு?
குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.15,000 வரை செலுத்தலாம்.

மாதத்தவணை எப்போது, எவ்வாறு செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு மாத இறுதி தேதிக்குள் மாதத் தவணையை தவறாமல் செலுத்திவிட வேண்டும். ரொக்கமாகவோ , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் மாத தவணையை நீங்கள் செலுத்தலாம்.

நான் செலுத்தும் மாத தவணையை எவ்வாறு எனது கணக்கில் வரவு வைக்கப்படும்?
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையை, அன்றைய மார்க்கெட் விலைக்கேற்ப தங்க (22K) எடையாக உங்கள் கணக்கில் வைக்கப்படும்.

இத்திட்டத்தில் சிறப்பு சலுகைகள் அல்லது பண்டிகை கால சலுகைகளுடன் பெற இயலுமா?
திட்ட பலன்களை, சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகை கால சலுகைகளுடன் இணைத்து பெற இயலாது. திட்டத்திற்கான பலன்களை மட்டுமே பெற இயலும்.

தவணையை செலுத்த தவறினால் என்ன ஆகும்?
தவணையை செலுத்த தவறும்பட்சத்தில், திட்டத்தின் பலன்களை பெற இயலாது. மொத்தம் செலுத்திய தவணை தொகையின் மதிப்பிற்கேற்ப நகைகளை சேதாரம் & GST செலுத்தியே வாங்க இயலும்.

இத்திட்டத்தில் எனது சேமிப்பை பணமாக பெற இயலுமா?
தங்க வளையல்களாவே பெற  இயலும். எச்சூழ்நிலையிலும் தங்க காசுகளாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற இயலாது.

    Terms & Conditions

    திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :

    1.இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் 11வது மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12ஆம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

    2.இத்திட்டத்தில் தாங்கள் செலுத்திய தொகையானது, அன்றைய மார்கெட் விலைக்கேற்ப (22 கேரட்) தங்க எடையாக தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    3.இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.5,000, ரூ.7,000, ரூ.10,000, ரூ.15,000 வரை மாதத்தவணையாக செலுத்தலாம்.

    4.மாதத்தின் 10ஆம் தேதிக்குள் தவணையை தவறாமல், ரொக்கமாகவோ, கிரெடிட் & டெபிட் கார்டுகள் மூலமாகவோ, நிறுவனத்தின் கலெக்க்ஷன் வாகனங்களிலோ, www.kvmjewellers.com என்ற எங்கள் இணையதளத்தின் மூலமாகவோ அல்லது Online பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தலாம். (அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் மற்றும் VISA, MASTER டெபிட் கார்டுகளுக்கு செயலாக்க கட்டணம் உண்டு)

    5.தவணை முறை திட்டங்களில், ஒரு மாதத்திற்கு ஒரு தவணையை மட்டுமே செலுத்த வேண்டும். திட்டத்தின் முதல் மாதம் தொடங்கி இறுதி மாதம் வரை ஒரே தவணைத்தொகையில் தான் தொடர வேண்டும்.

    6.திட்டம் முதிர்ந்து 12ஆம் மாதத்தில் நகை வாங்கும்பொழுது,தங்களின் பாஸ்புக் கணக்கில் உள்ள மொத்த எடைக்கு செய்கூலி சேதாரம் இல்லாமலும் மேலும் இன்னும் அரை (1/2) மடங்கு எடைக்கு அன்றைய மார்க்கெட் தங்க விலையை மட்டும் கொடுத்து சேதாரம் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். (14 % வரை)

    7.உதாரணமாக: பாஸ்புக்கில் இருக்கும் மொத்த எடை: 12 கிராம்., செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்க தகுதியான மொத்த எடை: 12+6=18 கிராம்.

    8.ஆண்டிக் (antique), கடா, திருகாணி, காஸ்டிங் (casting), யூனிக், கிளாசிக், பிரைம், etc.., போன்ற சிறப்பு வாய்ந்த வளையல்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டம் Daily Wear தங்க வளையல்களுக்கு பொருந்தும்.

    9.சிறப்புவாய்ந்த கற்கள், விலையுயர்ந்த கற்கள், பிறப்பு யோகக் கற்கள், சிர்கான் (Zircon), மற்றும் இதர பிற கல், எனாமல், மணிகள், மெழுகு, வெள்ளி இலை போன்றவைகளுக்கு கட்டணங்கள் பொருந்தும்.

    10.வாடிக்கையாளர் தங்க வளையல்கள் அல்லாது வேறு தங்க நகைகளை எடுக்க விரும்பினால் இத்திட்டத்தின் பலன்களை பெற இயலாது. (நிறுவனத்தின் முடிவே இறுதியானது).

    11.இத்திட்டத்தில் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் GST பொருந்தும்.

    12. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாஸ்புக்கை கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் புதிய பாஸ்புக்கை பெறுவதற்கு ரூ.50/- கட்டணமாக செலுத்தவேண்டும். வாடிக்கையாளரின் விபரங்களை சரிபார்த்த பிறகே பாஸ்புக் நகல் வழங்கப்படும்.

    13. இத்திட்டத்தில் வாடிக்கையாளரின் போட்டோ, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்படும். திட்டத்தின் இறுதியில் தங்க நகை வாங்கும்பொழுது திட்டத்தின் உறுப்பினர் நேரில் வரவேண்டும். திட்ட உறுப்பினரின் பெயர் மற்றும் கூடுதல் விபரங்களை சரிபார்க்க, உறுப்பினர் தங்களின் ஒரிஜினல் ஆதார் அட்டை & பதிவு செய்த தொலைபேசியை அவசியம் கொண்டுவருதல் வேண்டும். மேலும் ஒரிஜினல் பாஸ்புத்தகத்தை கண்டிப்பாக சமர்ப்பிக்கவேண்டும்.

    14. வாடிக்கையாளர் தன்னுடைய வாரிசுதாரர் ஒருவரை தேவைப்பட்டால் நியமிக்கலாம்.

    15. சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகைக்கால சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.

    16. இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களை பெற இயலாது. திட்ட காலம் முதிர்வு அடைவதற்குள் நகை திட்டத்தை முடித்துக்கொண்டால், அதற்கான செயலாக்க கட்டணத்தை(Processing fees) வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.

    17. இத்திட்டத்தில் மொத்த மதிப்பு ரூ.2,00,000/- அல்லது அதற்க்கு மேற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    18. இத்திட்டத்தின் நிபந்தனைகளை மாற்றி அமைக்க நியூ KVM ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. மேலும் அனைத்து சட்டரீதியான முறையீடுகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.