ஐஸ்வர்யம் |
|||
உதாரணம் |
|||
மாதம் செலுத்தும் ரூபாய் |
மொத்தம் 11 மாதங்கள் செலுத்தும் ரூபாய் |
நிறுவனம் பங்களிக்கும் தொகை |
திட்ட முடிவில் பெறும் நகையின் மதிப்பு ரூபாய் |
1000 | 11000 | 1000 | 12000 |
2000 | 22000 | 2000 | 24000 |
3000 | 33000 | 3000 | 36000 |
5000 | 55000 | 5000 | 60000 |
10000 | 110000 | 10000 | 120000 |
15000 | 165000 | 15000 | 180000 |

பொதுவான சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்கள்:
இத்திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?
இத்திட்டத்தில் 11 மாதங்கள் தவணையை தவறாமல் செலுத்தி வந்தால், 12ஆம் மாதம் முடிவில் ஒரு மாத தவணையை போனஸ்ஸாக பெற்று பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் குறைந்தபட்ச & அதிகபட்ச மாதத் தவணை எவ்வளவு?
குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.15000 வரை செலுத்தலாம்
மாதத்தவணை எப்போது, எவ்வாறு செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு மாத 10ஆம் தேதிக்குள் மாதத் தவணையை தவறாமல் செலுத்திவிட வேண்டும். ரொக்கமாகவோ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் மாத தவணையை நீங்கள் செலுத்தலாம்.
நான் செலுத்தும் மாத தவணையை எவ்வாறு எனது கணக்கில் வரவு வைக்கப்படும்?
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகையை பணமாகவே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் சிறப்பு சலுகைகள் அல்லது பண்டிகை கால சலுகைகளுடன் பெற இயலுமா?
திட்ட பலன்களை, சிறப்பு சலுகைகள் மற்றும் பண்டிகை கால சலுகைகளுடன் இணைத்து பெற இயலாது. திட்டத்திற்கான பலன்களை மட்டுமே பெற இயலும்.
இத்திட்டத்தில் எனது சேமிப்பை பணமாக பெற இயலுமா?
தங்கம்/வைரம்/பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளாக மட்டுமே பெற இயலும். எச்சூழ்நிலையிலும் தங்க காசுகளாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற இயலாது.
தவணையை செலுத்த தவறினால் என்ன ஆகும்?
தவணையை செலுத்த தவறும்பட்சத்தில், திட்டத்தின் பலன்களை பெற இயலாது. மொத்தம் செலுத்திய தவணை மதிப்பிற்கேற்ப நகைகளை சேதாரம் மற்றும் GST செலுத்தியே வாங்க இயலும்.